கணிணி ! காசினி ! கடவுள் !

அன்பென்ற பாதை ஒன்றை போட்டு வைத்தார் !
அழகாக சென்றுவர ஓர் அறிவைத் தந்தார் !
பழகவைத்து பக்குவத்தை படர வைத்தார் !
உழைத்து வாழ உரைத்து இங்கே
உன்னைச் செய்தார் ! ஆல் போல்
தழைத்திடவே தண்மையென்ற
குணத்தைத் தந்தார் !
அருட்சக்தி என்ற பெயர் அவருக்குண்டு !
இருள் போக்கும் ஒளியதிலே
ஒளர்வதுண்டு !
களிப்பெய்த கண்ணாடி மனம் தந்தார் !
உளியாகும் உண்மையினால்
செதுக்கி விட்டார் !
பதுங்கி இருந்த பல்கலையை
பொங்க வைத்தார் !
கவியெழுதி கா~p பெற
கருணை செய்தார் !
அவருடைய அருள்வாக்கு
தவறை நீக்கும் !
சிவமாகும் தன்மைனயினை
சீக்கிரம் நல்கும் !
சக்கரத்தின் ப+ஜைக்கொரு
சாத்திரம் செய்தார் ! நல்
பாத்திரமாய் ஆவதற்கு
பாத்திறம் தந்தார்
புறத்தினிலே மணி அடிக்கும்
பூஜைக்கிங்கு
அறமான அற்புதமாய்
தத்துவம் தந்தார் !
புத்தகத்தால் பாரினையே
மாற்றி விட்டார் !
சித்தி செய்து ஜன்ம வினை
நீக்கி விட்டார் !
ஓங்கார முத்திரையை
ஒலிக்க விட்டார் !
ருதமான ஓர் அமைப்பை
நிறுவி விட்டார் !
கருவிடாத கதையினையே
அருளால் தருவார் !
பெருமை செய்தால்
கருவம் இன்றி காட்சி தருவார் !
திருவிச்சை தனக்கு ஒரு
தொண்டு செய்தார் !
அருட்சக்தி ஆண்டவனாய்
திருவருள் தந்தார் !
கதைஅளந்து பேசாதே
கடவூள் பூஜை செய் என்பார் !
தடுமாற்றம் இல்லாது (மனதிற்கு)
கொடுஇ மாற்றம் என்பார் !
அடுக்கிடலாம் அவர் பெருமை
இடுக்கின்றி இவ்வூலகில் !
நடுக்கத்தை போக்கி நமக்கு
நலத்தைச் செய்வார் !
கொடுக்கின்ற குணத்தினிலோ
அந்த கர்ணன் ஆனார் !
புத்தக்தை படித்து பல
நுணுக்கம் சொல்வார்இ
படுக்கையிலே புரண்டு பகல்
போக்க மாட்டார் !
இடுக்கண் வருகையிலே
இனிய துணையாய் இருப்பார் !
பணிவாய் இருப்பாய் என்று
துணிவைத் தருவார் !
கணிணியாலே வரைவூ செய்து
கருத்தைத் தருவார்இ
சுலபமாக்கி சாத்திரத்தை
கரத்தில் தருவார் !
சிரத்தினிலே அவர் பாதம்
சிரத்தை கொள்வோம் !
பரகதிக்கு வேறு பாதை
போடவேண்டாம் !
விஞ்ஞான வித்தையெல்லாம்
மெய் ஞானம் என்பார் !
கணிணிக்கு வேதாந்தப்
பொருளெழுது என்றார் !
எழுதுகின்ற எழுத்தெல்லாம் (அவரை)
வழுத்தியதால் வந்தம்மா வியனுலகில் !
கழுத்திலே மாலையாக அதைஅமைத்து
கணிணிக்கு வேதாந்த பொருளைச் சொல்வேன் !
காசினீயோர் கேட்டிடுவீர் பொறுமையாக !
வேசமிலலை விவேகமே உறுதியாக !

  1. மானிட்டர்

கண் போன்றே மானிட்டர் காட்சி தரும் !
கண் போல காக்க வேண்டும் அன்றி கழன்று விழும் !
அண்மையிலே பார்க்காதே கண்விழி சிதறும் !
மென்மையான கண்ணாலே நன்மையைக் காண்பாய் !
மாத்ருகையாய் அக்ஷரங்கள் மனதினிலே அதுவே
உன்னெதிரே இருக்குதப்பா மானிட்டராக !
தேவீ கீதையிலே தேவி சொல்லும்
த்ருஷ்டி சிருஷ்டி வாதம் இங்கே
அருமையான உபமானம் இப்பொருளுக்கு !
கருமையாக இருந்தது ஓர் நாள் இன்றௌ
கலர் கலராய் காட்சியினை கண்ணில் காட்டும் !
அறியாமை பார்வையெலாம் கருப்பு வெள்ளை !
அறிந்திடும் மெய்ஞானம் வண்ணப்பார்வை !

  1. கீ போர்டு

பொரித்திடலாம் எழுத்தையூம் எண்ணத்தையூம்
பெரிதான கண்ணாலே பரத்தைப் பாரு !
மாத்ருகையை மனதினிலே தட்டிப்பாரு !
சாத்திரங்கள் எல்லாமே பெரிதாம் கீ போர்டு !
நல்லெண்ணம் என்ற ஒரு எழுத்தை எழுது !
நல்லதில்லை என்றாலோ உடனே நீக்கு !
அன்பென்ற எண்டரை நீ அழுத்தாவிட்டால்
அடுத்த வரி வாழ்க்கையது நின்றுவிடும் !
படுத்துகின்ற அக்ஞான பதரையெல்லாம்
விடுத்துவிடு எஸ்கேப்பாம் ஞானக் கீயால் !
வேதம் வகுத்தபடி வாழ வேண்டும் அன்றி
வி;லக்கிவிடு ஆல்டர் டெலிட் கன்ரோலாம்
குருவின் சொல்லால் !
எண்ணும் எழுத்தெல்லாம் இதிலே உண்டு !
எம்பி எம்பி சென்றிடவே டாப்பும் உண்டு !
அம்பிகையை தொழுதுவிட்டால் அருளும் உண்டு !
அங்குசமாம் கண்ட்ரோல் கீ அவள் கையில் உண்டு !

  1. மௌஸ்

மானிட்டர் திரையினிலே மவூசின் ஓட்டம் !
ப்ரபஞ்சத் திரையினிலே மனதின் ஓட்டம் !
உருளுகின்ற விழிபோலே உருளும் மௌசு !
உலகமெனும் உருண்டையது உன்னுள் புதுசு !
பலவிதமாய் க்ளிக் செய்து பரவூதல் போல
கலகம் செய்யூம் மனதினிலே வினையின் வீச்சு !
பதிவூ செய்ய பக்கம் புரட்ட வேண்டும் மவூசு !
அதிகமாக சொல்வதென்ன? அதுவே மனசு ! (மவூசில்)
எழுத்தை எழுதுகையில் எழுந்து நிற்கும் !
கழுத்தை திருப்பையிலே ஓடிச் செல்லும் ! (மனதில்)
இமைமூடி திறக்கையிலே எண்ணம் பதியூம் !
சுமை ஏற்றிக்கொள்ளாதே மனதாம் மவூசில் !
அமைந்த வாழ்க்கையதில் அமைதி கொள்ளு !
ஏனெனில்
மவூசில் மண்ணான கண்ணாடி கவிழ்வது போல்
பொன்னான மனமதிலே சுமைகொள்ளாதே !
இடவலது இருக்கும் மவூசில் !
வெளிஉள் என மனதும் இரண்டு !

164

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments