நாகரசன் பேட்டையது ஓர் பாட்டை பாட்டைஞானரசக் கோட்டையது ஓர் வேட்கை வேட்கைவானமதில் வீசுகின்ற ஒளிக் கூட்டை கூட்டை தேனமுதாய் தந்த சித்தன்காரைக் கோட்டை கோட்டை
கைவீசி அவர் நடக்கையிலே வேகம் வேகம்மைவீசி மயக்குமந்த சித்தி மாயம் மாயம்ஐப்பசிதிங்கள் ஒளி கரையில் வீசும் வீசும்உட்பசிக்கும் உதவி செய்யும் ஊக்கம் ஊக்கம்
வெத்திலைப் பொட்டிக்குள் தங்கம் தங்கம்சித்தி கண்டு மயங்குமந்த சீடர் கூட்டம்முத்தி வழி செல்லுகின்ற ஒரு மோனம் மோனம்நித்திரைக்குள் நீண்டு நிற்குமஅவ தாரம் தாரம்
மடப்பள்ளிக்குள்ளேதான் வேகும் சாதம் சாதம்மடமனதில் ஏறிடுமோ ஞான மோகம் மோகம்திடவுருவம் தீட்சண்யம் அவர் நோக்கம் நோக்கம்வடநாட்டுச் சித்தர் தந்த வேத யோகம் யோகம்
படபடப்பை நீக்குகின்ற ஒரு பாடம் பாடம்விடவேண்டும் வினையெல்லாம் ஓடும் தூரம் தூரம்வடவிருக்ஷம் அமர்ந்து சொன்னஉப தேசம் தேசம்குடமுருட்டி ஆற்றருகில் ஆல விருக்ஷம் விருக்ஷம்
ஞானகிரி வந்து சென்ற ஞான பாதம் பாதம்கனம் மிகுந்த வேந்தரெல்லாம் காணும் காணும்சினம் மிகுந்தால் வந்திடுமே சோகம் சோகம்சனம் மிகுந்த கரையினிலே ஆன்ம போதம் போதம்
உணவுண்டு உறங்குதற்கா நாம் வந்தோம் வந்தோம்மணமுடித்து மக்கள் பெறும் வாழ்வு துக்கம் துக்கம்குணமுடிந்த சித்தனவர் தலைப் பாகம் பாகம்கனவாகிப் போகுமிந்த நீண்ட காலம் காலம்
மின்னியலால் மயங்கி நிற்கும் மாதர் போக்கும்அன்றே அவர்சொன்ன தீர்க்க ஊகம் ஊகம்கன்றழுதால் பசு நிற்கும் கருணை நோக்கம்இன்றவரும் சித்தியான ஒரு நேரம் நேரம்
சித்திக்கு மறைவுண்டு அந்த சித்தர்க்கல்லபுத்திக்கு மறைவுண்டு பரா பக்திக்கல்லஎத்திக்கு சென்றாலும் இறையின் மேன்மைமுக்திக்கு வழிகோலும் என்றும் மவுனம் மவுனம்
(வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம்)(ஸ்ரீ காரைசித்தர் முக்தி தினம்)24-8-2019
