பேசும் வாயே உலகப்பேச்சை விடு!
பேச்சாயி அவளைப் புகழ்ந்து விடு!
கேட்கும் காதே சற்று மூடி விடு!
உனக்குள்ளே ஓசையைக் கேட்டுவிடு!
முகரும் மூக்கே உன்மூச்சடக்கு!
மூலவித்தையை முகர்ந்து விடு!
காணும் கண்ணே சற்றயர்ந்து விடு
கண்டது போதும் காட்சி விடு!
நடக்கும் காலே நின்று விடு!
நல்லவள் கோயில் சென்று விடு!
கொடுக்கும் கையே கொடுத்து விடு!
அடுக்கும் காலன் வரும் முன்னே!
உணரும் உடலே ஓய்ந்துவிடு!
உனக்குள் உண்மை அதைத்தேடு!
ஓடும் மனமே ஒடுங்கி விடு! உன்
ஓட்டத்தை கொஞ்சம் நிறுத்தி விடு!
