(ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமங்களுக்கு உரிய தமிழ்ப் பாடல்கள்)
- ஸ்ரீமாதா
அம்மா உனக்கு நமஸ்காரம்
அன்பும் அருளும் தரவேண்டும் (அ)
ஸ்ரீஎன்ற திருவின் அவதாரம்
ஸ்ரீஎன்றால் அமுதவடிவாகும் (அ)
அழகாய் தந்தாய் ஞானானந்தம்
பழமைப் பொருள் நீ பரமானந்தம்
குழந்தை நானே அன்னை நீயே
அமுதுண்ண பெறுவேன் அன்புடனே (அ)
விடமுண்ட சிவனார் உயிர் பிழைத்தார்
திடமான உந்தன் திருவடிவால்
தடையில்லா ஞானம் நான் பெறுவேன்
கடத்தினுள் உன்னை வரவழைத்தேன் (அ)
