- குருவாய் வந்தான் குமரன் அவனே
சருகைக் கிடந்த சீவனைக் காத்தான்
இருவினை தன்னை ஈராய் கிழித்தான்
செருவில் சூரனை சக்தியால் கொன்றான் - குஹையில் வசிப்போன் குன்றம் நிற்போன்
பகையை கடிந்தே பக்குவம் தருவான்
சிகையில் கிரீடம் சீராய் தரித்தான்
சகஜ நிலையை சரியாய் அருள்வான் - சக்தியின் கணையை செங்கையில் தரித்தான்
பக்தியின் மாந்தரை பக்கத்தில் சேர்ப்பான்
சுக்கிர குலத்தை சக்தியால் பிளந்தான்
முக்தியை கரத்தில் முன்னே தருவான் - மனமே மனமே தாளினை மறவேல்
மனதின் அதிபதி முருகன் கைவேல்
சினத்தைக் கொண்டே அசுரர் அழித்தான்
தினமும் அவன்தாள் தொழுவாய் தொழுவாய் - செவியில் உரைத்தான் ஓமெனும் மந்திரம்
தவித்திடும் மாந்தர் நிழல்தரும் தருவாம்
அவியினை தாங்கும் அமரரின் தலைவன்
புவியிதை காக்கும் பரிஉடை பரமாம்
