ஆங்கிலப் புத்தாண்டுக் கவிதை
போய்வா பத்தொன்பது
வாவா இருபதெழுந்து
இருப்பது எல்லாம் இந்த
இருபதிலும் தொடர்ந்திடட்டும்
முகத்தினிலே கலை பேசி
மூடிவிடு அலைபேசி
உலை வைக்க நீர் வேண்டும்
சிலை வைக்க கல் வேண்டும்
கலை வளர கரம் வேண்டும் இந்த
நிலை யாவும் நிலவும் வருடம்
பிறந்தது டொண்டி டொண்டி
வாழ்க்கை எனும் வண்டி வண்டி
அதில் ஆடவேணும் டொண்டி டொண்டி
மகிழ்ச்சி கிடக்குது மண்டி மண்டி
துயரமெல்லாம் துண்டி துண்டி
துர்க்கையை அண்டி அண்டி
ஜபிக்க வேணும் சண்டி சண்டி
இருபதிலே இருந்த சக்தி
அறுபதிலே தொடர்ந்திடட்டும்
மறுபதிலைக் கூறும்போது
பொறுமையாக நா உறட்டும்
பத்திரத்தில் எழுதும்போது
பத்திரமாய் முழுதாய் எழுது
உத்தி பல செய்யும் ஊரு நல்
புத்தியினை உளம் பெறட்டும்
பத்தொன்பதின் பகைகள் எல்லாம்
புத்தாண்டில் புகையாய் மறைய
வித்தகனாம் விநாயகனும் நல்ல
புத்தியினை படைத்தருளட்டும்
ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
(நாகசுந்தரம்)
01-01-2020
