பஞ்சாயதனக் குறள்
ஸ்ரீ கணபதி
ஐங்கரனே ஆனை முகத்தானே அன்புடன்
பொங்கும் பொருளைப் புகல்
சிவபெருமான்
விடையேறும் பெம்மானே வாழ்வு பெருகிட
தடையெல்லாம் தீரத் துடை
திருமால்
ஆவிடை வாழ்பவன் ஆழிடை நீள்பவன்
சாவிடை செல்லாமல் செய்
பகலவன்
காலை எழுபவன் மாலை மறைபவன்
காலைத் தொழுதிடக் கல்
அம்பாள்
நகரம் நிறைந்தவள் நாவிடை நிற்பவள்
ஆதாரம் ஆழமாய் நம்பு
