ராகம் : ரீதிகௌளை
என்னடா உலகமிது வெறும் மாயை
பொன்னும் மண்ணும் சூழ்ந்த சாயை (ஏ)
வாதும் சூதும் நிறைந்தது வெட்கமற்றது
ஏதும் சுகமில்லை எதற்கும் பயனில்லை (எ)
பெரியோரை சிறிதும் மதிப்பதில்லை
பெண்ணுக்கு சமமாய் உரிமையில்லை
பாட்டில் ஒரு ராகமில்லை சந்தமில்லை
காட்டில் திரியும் விலங்காய் ஒரு நோக்கமில்லை (எ)
பாவம் புண்ணியம் பேதம் பார்ப்பதில்லை
கோவம் வந்தாலோ தலை கால் தெரிவதில்லை
தாவும் மனதினை தெய்வ பக்கம் திரும்புதில்லை
நோவும் நொடிகளும் நித்தம் நித்தம் அகலவில்லை (எ)
காதல் என்பார் கரம் பிடி என்றால் ஓடிடுவார்
சாதல் நெருங்கினாலும் சத்தியம் தனை மறப்பார்
நோதல் சாத்திரங்கள் நியமம் உதறிடுவார்
வேதம் சனாதனம் திரித்து[ப் பொருள் சொல்வார் (எ)
இருக்கும் வரை இறைவா தலைவா என்பார்
இறந்த அரை நொடியில் பிணமென்றகன்றிடுவார்
உறவை மதிக்காமல் உபத்திரவம் பல செய்வார்
சிறந்த சனாதனத்தை சொற்களால் அவமதிப்பார் (எ)
