புது வருடப் புதுக்கவிதை
புத்தம் புது வருடம், பிறக்கட்டும் புது வட்டம்
நித்தம் மணி மகுடம், நீளட்டும் புது சிகரம்
வித்தம் அது வளரும், வரட்டும் புது சுரங்கம்
சித்தம் அது சுழலும், சீரட்டும் சினி அரங்கம
அன்புக்கொரு வருடம் அது
இருப்பத்தொன்றாய் இருக்கட்டும்
வம்புசெய்யும் வைரஸ் அது
இருப்பதிடம் ஒழிந்து போகட்டும்
தெம்பும் புதுத் தெளிவும் இரு
விழியில் ஒளி பெறட்டும்
கம்பும் கத களியும் மறு
படியும் நடை பெறட்டும்
தொற்றும் பல நோய்க்காய்
தீண்டாமை கடை பிடித்தோம்
வாட்டும் விலகல் நோயும்
தீட்டும் கவியால் விலகட்டும்
மாற்றம் வர வேண்டும்
மக்கள் சேர வேண்டும்
ஏற்றம் இனி எங்கும்
ஊட்டம் மனிதம் பெறட்டும்
இருப்பதில் எல்லாம் இங்கு
இன்னொரு ஒன்று கூடட்டும்
அறுபத்தைக் கடந்த முதியோர்
அரங்கில் ஒன்று சேரட்டும்
சிறகினை விரித்து பறந்து
உறவுகள் ஒன்றாய் உண்ணட்டும்
பாரினில் பரவிய நோயின்
தரவுகள் குறைந்திட வேண்டும்
இந்த இருபத்தொன்றில்
ஆட்சிக்காய்க் கூட்டு சேரும்
காட்சிகள் அரங்கேறும்
சூழ்ச்சிகள் செய்யும் மனமும்
சந்தர்ப்பம் அதைத் தேடும்
காழ்ப்புகள் சுட்டுரையாய்
கைபேசியில் காட்டியே நிற்கும்
சாட்சியாய் இருப்பத்தொன்று
சாட்சியாய் இருப்பது மற்றொன்று
கல்விச் சாலைகள் திறந்தால்
கைபேசியின் கதிர் குறையும்
செல்வனும் செல்வியும் சேர்ந்து
அலுவலில் கை கோர்க்கட்டும்
நெற்பயிர் விளைக்கும் நல்லோர்
பற்பல சுகம் பெறட்டும்
அற்புதம் பல நடந்து ஆண்டு
கற்கண்டாய் இனிக்கட்டும்
31-12-2020 மாலை
