ராகம் : கீரவாணி
(மெட்டு : இன்னமும் சந்தேகப் படலாமோ)
பல்லவி
இன்னமும் பலகாரம் சாப்பிடலாமோ
அநுபல்லவி
அன்னம்பல புசித்து ஆகாரமே தின்ன தின்னவே வாழ்வென்று
தெய்வமதை மறந்து [இன்னமு]
சரணம்
பொங்கல் பொரியல் புலபுலவென்றே
தங்கமயமான துவையல் துருவல்
பங்கமில்லா பாகற்காய் குழம்பு
திங்கத் திகட்டாத தேனுடன் பாயசம்
வாங்கி ரசம் வைத்து வேணதுண்டாச்சு [இன்னமு]
நாரணன் நாமம் நல்லதாய் பல தோத்திரம்
பூரணன் பராபரன் பெருமை மிக்க பாடலும்
காரணம் இன்றி கருணை பொழியும் கடவுள்பேரும்
பாராயணம் செய்ய துதிகள் பொழுதும் இருக்கவும் [இன்னமு]

மிகவும் அருமை