ஏதோ ஒண்ணு இருக்குது
உன் உடம்புக்குள்ள
அது என்னான்னு தெரிஞ்சுக்கோ
மண்ணுல போகக்குள்ள
அதோ பார் தெரியுது வானுக்குள்ள
அந்த சூரியனும் சந்திரனும்
உன் உயிருக்குள்ள
பார்க்கும் உயிர் எல்லாம்
இந்த மண்ணுக்குள்ள
பராசக்தி வடிவமப்பா
அத தெரிஞ்சிகல
நானென்ற அகங்காரம்
உன் நெஞ்சுக்குள்ள
நுழையாம பார்த்துக்கோ
எந்த காலத்துல
வேதங்கள் நான்கிருக்கு
நெதம் ஓதக்குள்ள
பாதையை காட்டிவிடும்
செத போறக்குள்ள
அம்புலனும் ஆட்டம் போடும்
அத அடக்கக்குள்ள
தெம்புடனே வெல்ல வேண்டும்
கத முடியகுள்ள
குருநாதர் சொன்னபடி
கேட்ககுள
மாசெல்லாம்
தீருமப்பா உன்
மனசுக்குள்ள
பாசபந்தம் எல்லாம் உன்
பார்வைக்குள்ள
ஆச வைத்தால் போதும்
வம்புக்குள்ள
அஞ்சு கோசம் மூடிருக்கு
இந்த ஆன்மாவில
பஞ்சாக போகுமுன்னே
பிரித்து பாரு உள்ள
நானறிஞ்சேன் என்று சொல்வாய்
விரலுக்குள்ள
தொட்டுக்காட்டும் இதயம்தான்
தத் பதமாம் புள்ள
எளிமையாக சொல்லி விட்டேன்
இந்த தத்துவத்த
புரிந்து கொண்டால் போகவேண்டாம்
கருக் குழியிக்குள்ள
