விழித்துக் கொள்ளடா ஜீவா
விழித்துக் கொள்ளடா (வி)
பிரக்ஞானம் பிரம்மமென்னும் சங்கு
ஊதுதே இன்னும் உறக்கம் ஏனடா (வி)
ஆற்றங்கரை ஓரத்திலே கோழி நிற்குதே
கூற்று வரும் கூற்று வரும் என்றே கூவுதே
கூட்டாக திவ்யமென்னும் குருக்கள் நிற்குறார்
பாட்டு பாடி பரகதிக்கு பஜனை செய்கிறார் (வி)
வான்மயத்தில் வேதாந்த கோயில் தன்னிலே
பொன்மயமாம் போதமென்னும் இலையும் விரிக்கிறார்
தன்மயமாம் பொங்கல் தன்னை உண்ணத் தருகிறார்
உன்னை சூழ்ந்த அக்ஞயான இருளும் அகன்றதே (வி)
