எங்கே இருக்கிறாய் இறைவா நீ
எங்கே இருக்கிறாய்
நீல வண்ணமாய் நீள நிறைந்த
ஆகாய வெளியிலா
எங்கே இருக்கிறாய் இறைவா நீ
எங்கே இருக்கிறாய்
மேகத்திடை மறைந்த மலையிலா
இல்லை குஹையிலா
எங்கே இருக்கிறாய் இறைவா நீ
எங்கே இருக்கிறாய்
ஓங்கி வளர்ந்த கோபுரம்
தாங்கி நிற்கும் கோயிலிலா
எங்கே இருக்கிறாய் இறைவா நீ
எங்கே இருக்கிறாய்
மறையோதும் முனிவர் மனத்திலா
இல்லை மஹனீயர் சிரத்திலா
எங்கே இருக்கிறாய் இறைவா நீ
எங்கே இருக்கிறாய்
ஏழு ஸ்வரம் கூடும் இசையிலா
இல்லை ஏறி இறங்கும் விசையிலா
எங்கே இருக்கிறாய் இறைவா நீ
எங்கே இருக்கிறாய்
அணிகலன் அணிந்த செல்வந்தர் வீட்டிலா
அணிய துணியிலா ஏழை குடிசையா
எங்கே இருக்கிறாய் இறைவா நீ
எங்கே இருக்கிறாய்
பெண்ணிலா ஆணிலா பொன்னிலா மணியிலா
விண்ணிலா வெண்னிலவிலா
எங்கே இருக்கிறாய் இறைவா நீ
எங்கே இருக்கிறாய்
நதியிலா வயலிலா நிலத்திலா குளத்திலா
எதிரிலா மறைவிலா ஏகாந்த நினைவிலா
எங்கே இருக்கிறாய் இறைவா நீ
எங்கே இருக்கிறாய்
வாக்கிலா மூக்கிலா கரத்திலா சிரத்திலா
நோக்கிலா நிறத்திலா மரத்திலா
எங்கே இருக்கிறாய் இறைவா நீ
எங்கே இருக்கிறாய்
என் மனத்திலா உளத்திலா தனத்திலா உறவிலா
குணத்திலா குருவிலா மணத்திலா மலரிலா
எங்கே இருக்கிறாய் இறைவா நீ
எங்கே இருக்கிறாய்
எங்கிருந்தாலும் என் முன்னிருந்தாலும்
மறைந்திருந்தாலும் மிக தள்ளியிருந்தாலும்
இருக்கிறாய் என்ற எண்ணம் இருக்கிறது
அது போதுமடா விதியை வெல்லுமடா
எங்கும் இருக்கிறாய் இறைவா நீ
எங்கும் இருக்கிறாய்
அதை உணர்ந்தேன்
அந்தகன் வழி மறந்தேன்
சொந்தமாய் எந்தன் சொரூபம்
உணர்ந்தேன் அதை சொன்ன குரு
அடி பணிந்தேன்
எங்கும் இருக்கிறாய் இறைவா நீ
எங்கும் இருக்கிறாய்

Mika Mika Arumai