1. கைத்தல நிறைகனி

ராகம் : கேதாரம், தாளம் : ஆதி

(எழுத்து : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம், பாடியவர் : இசைவேணி பாம்பே அபர்ணா)

பல்லவி

கைத்தல நிறைகனி எனப்பாடு
கைத்தலம் தனிலே பெரும் பேறு (கை)

அனுபல்லவி

அப்பமோடவல் பொறி அவற்றோடு
தப்பாமல் தந்திட தரும் அருள் வீடு
கற்றிடும் அடியவர் குரலோடு
பெற்றிடும் பலவிதம் மனதோடு (கை)

சரணம்

ஊமத்தை மலரதை உயர் சிரம் கொண்டோன்
சோமனாம் சந்திரன் பிறை தரித்தோன்
சமரதில் வெல்லும் பெரும்பிள்ளை
நிதமவன் தாள்தொழ அறும் தொல்லை (கை)

மத்தளம் போன்ற வயிருடையான்
சத்தியாம் உமையின் உயிரணையான்
தேனினும் இனிய தமிழ் தந்தோன்
தேன்கொடு மலரினால் அடிபணிவேன் (கை)

முப்புரம் எரித்த சிவன் தேரில்
அச்சினை அறுத்தவன் அவனன்றோ
அப்பன் முருகனின் காதலியை
தப்பாமல் தயையுடன் தந்தவனாம் (கை)

=============================================

திருப்புகழ் 1 கைத்தல நிறைகனி (வயலூர்)

தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன …… தனதான
……… பாடல் ………
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக …… னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை …… கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய …… மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு …… பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய …… முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த …… அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை …… இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் …… பெருமாளே
191

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments