கட்டி வைச்சிருக்கு பிரம்மம்
கட்டி வைச்சிருக்கு
பிராணன் என்னுள் கயிராலே
நம்மை கட்டி வைச்சிருக்கு
தட்டி வைச்சிருக்கு பிரம்மம்
தட்டி வைச்சிருக்கு
தத்துவம் என்னும் தடியாலே
நம்மை தட்டி வைச்சிருக்கு
எட்டி வைச்சிருக்கு பிரம்மம்
எட்டி வைச்சிருக்கு
ஏகாந்தம் என்னும் இடத்தாலே
நம்மை எட்டி வைச்சிருக்கு
குட்டி வைச்சிருக்கு பிரம்மம்
குட்டி வைச்சிருக்கு
ஓங்காரம் என்னும் கையாலே
நம்மை குட்டி வைச்சிருக்கு
சுட்டு வைச்சிருக்கு பிரம்மம்
சுட்டு வைச்சிருக்கு
வைராக்கியம் என்னும் தீயாலே
நம்மை சுட்டு வைச்சிருக்கு
நட்டு வைச்சிருக்கு பிரம்மம்
நட்டு வைச்சிருக்கு
சம்சாரம் என்னும் மரத்தை
நன்றாய் நட்டு வைச்சிருக்கு
விட்டு வைச்சிருக்கு பிரம்மம்
விட்டு வைச்சிருக்கு
கருணை என்னும் குணத்தாலே
நம்மை விட்டு வைச்சிருக்கு
பொட்டு வைச்சிருக்கு பிரம்மம்
பொட்டு வைச்சிருக்கு
சக்தி என்னும் சிவப்பாலே
நெற்றி பொட்டு வைச்சிருக்கு
பற்று வைச்சிருக்கு பிரம்மம்
பற்று வைச்சிருக்கு
மாயை தன்னில் மூழ்கினாலும்
நம்மேல் பற்று வைச்சிருக்கு
போட்டு வைச்சிருக்கு பிரம்மம்
போட்டு வைச்சிருக்கு
நாலு வாக்கிய உபதேசம்
குருவிடம் போட்டு வைச்சிருக்கு
கூட்டி வைச்சிருக்கு பிரம்மம்
கூட்டி வைச்சிருக்கு
குருநாதர் சத்சங்கத்தில்
நம்மை கூட்டி வைச்சிருக்கு

எழுதவச்சிருக்கு பிர்ம்மம்
எழுதவச்சிருக்கு
எளிய தமிழில் கனியவச்சிருக்கு
உந்தனை…
ஆசிகள்.
அருமை