அன்னைக்கு நிகரான அன்பு இல்லை
தந்தைக்கு நிகரான ஆசான் இல்லை
மனைவிக்கு நிகரான மகிழ்ச்சி இல்லை
மகனுக்கு நிகரான இடமும் இல்லை
மகளுக்கு நிகரான பாசம் இல்லை
அத்தைக்கு நிகரான சொல்லும் இல்லை
மாமனுக்கு நிகரான தோளும் இல்லை
நண்பனுக்கு நிகரான புத்தகம் இல்லை
ஆசானுக்கு நிகரான கருணை இல்லை
தம்பிக்கு நிகரான துணையும் இல்லை
மந்திரிக்கு நிகரான புத்தியும் இல்லை
குதிரைக்கு நிகரான வாகனம் இல்லை
நாய்களுக்கு நிகரான நன்றி இல்லை
பொய்யிக்கு நிகரான பாவம் இல்லை
கைகளுக்கு நிகரான ஆயுதம் இல்லை
கால்களுக்கு நிகரான வேகம் இல்லை
கண்ணுக்கு நிகரான கூர்மை இல்லை
வாய்மைக்கு நிகரான வலிமை இல்லை
பூமிக்கு நிகரான பொறுமை இல்லை
பெண்மைக்கு நிகரான தெய்வம் இல்லை
அன்புக்கு நிகரான ஆற்றல் இல்லை
பழையதற்கு நிகரான உணவு இல்லை
கற்பிற்கு நிகரான நெருப்பு இல்லை
கருணைக்கு நிகரான குளிர்ச்சி இல்லை
வறுமைக்கு நிகரான கொடுமை இல்லை
கருமைக்கு நிகரான வண்ணம் இல்லை
மன்னிப்பிற்கினையான தீர்ப்பு இல்லை
உடலுக்கு நிகரான உடையும் இல்லை
கடலுக்கு நிகரான அளவும் இல்லை
நிலவுக்கு நிகரான தண்மை இல்லை
கண்ணிமைக்கு நிகரான காப்பு இல்லை
மண்ணிதற்கு நிகரான மணமும் இல்லை
கவிதைக்கு நிகரான காட்சி இல்லை
காதலுக்கு நிகரான இன்பம் இல்லை
காற்றுக்கு நிகரான ஓசை இல்லை
காட்டுக்கு நிகரான பயமும் இல்லை
தமிழுக்கு நிகரான இனிமை இல்லை
பாலுக்கு நிகரான அமிழ்தம் இல்லை
கம்பனுக்கு நிகரான கவிஞன் இல்லை
குறளுக்கு நிகரான பாக்கள் இல்லை
வீணைக்கு நிகரான இசையும் இல்லை
பானைக்கு நிகரான பாண்டம் இல்லை
சேனைக்கு நிகரான காயும் இல்லை
தேனுக்கு நிகரான சுவையும் இல்லை
வானுக்கு நிகரான பூதம் இல்லை
கண்ணனுக்கு நிகரான குருவும் இல்லை
கண்ணப்பர்க்கு நிகரான பூஜை இல்லை
பொன்னிக்கு நிகரான நதியும் இல்லை
இன்றைக்கு நிகரான காலம் இல்லை
பிறப்புக்கு நிகரான பந்தம் இல்லை
இறப்புக்கு நிகரான சோகமும் இல்லை

மிகவும் அருமை
இந்த கவிதைக்கு நிகரான இனி ஒரு கவிதை இல்லை அருமையான கவிதை