ராகம் : ஹம்சத்வனி l தாளம் : ஆதி
முத்தைத் தரும் முருகா உன்
சத்தித் திருனகை செய்வாளே ஞான (மு)
வேலாயுதம் கொண்டவனே பெரும் போராய்
வரும் காலன் பயம் தீர்க்கும் அருள் தாராய் (மு)
அப்பனுக்கு உபதேசம் செய்த குருநாதா
எப்பொதென் அறியாமை தீர்ப்பாய் வேதா
முப்பத்து முக்கோடி தேவர்கள் கண நாதா
பத்துத்தலைப் பகைவன் திரு மருகோனே (மு)
எனைக்காத்தல் உனக்கு பெரிதாமோ
வினை கடிதல் தன்னை அறியாயோ
துக்கத்தினை தொகுத் தரியாயோ
பக்கத்தினில் வந்தருள் செய்யாயோ (மு)
பகைவர் தனை போரில் வெல்வோனே
புகையாய் வரும் வினை கடிவோனே
தகையும் மெய்யாம் வகை தருவாயே
குகைகள் உடை கிரியை உடைத்தோனே (மு)
திருப்புகழ் 6 முத்தைத்தரு (திருவருணை)
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன …… தனதான
……… பாடல் ………
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.
