4. உனைத்தி னந்தொழுதிலன்…….

ராகம் : ஷண்முகப்ரியா தாளம் : ஆதி

SINGER : Isai Veni Bombay Aparna

உனைத்தினம் பணியாத எனக்கருள் செய்வாயா
சரவண மூர்த்தியே ஷண்முகனே (உ)

வள்ளியுடன் வசிக்கும் வீரனே முருகா
உள்ளமெனும் பரங்குன்றின் நாதா (உ)

ஒரு மலர் எடுத்து உன் பாதம் அளித்திலனே
ஒரு நாழியும் உன் புகழ் பாடி தொழுதிலனே
அருள்சக்தி உடைய அன்பரிடம் சார்ந்திலனே
திருவருள் தாராய் திருவலம் வருகிலனே நான் (உ)

அந்தகன் கை பாசம் பிணைத்திட வருகையில்
சொந்தமாய் வந்தெனை அணைத்திட வருவாயே
தெனத்தெனந்தன எனவோதும் வண்டுகள் சூழ்
மனத்திருப்பரம் குன்றில் வாழ் மயில் நேசா (உ)

திருப்புகழ் 8 உனைத் தினம்  (திருப்பரங்குன்றம்)

தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன …… தனதான
……… பாடல் ………
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன …… தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் …… மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு …… பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தில் என்பய மறமயில் முதுகினில் …… வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் …… புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை …… உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ …… மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப் பரங்கிரி தனிலுறை சரவண …… பெருமாளே.
237

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments