குறவன் குறத்தி பாடல்
குறத்தி
மனிதன் மனம் மாறும் நிலை
ஏனடா குறவா?
குறவன்
காசு பணம் கையில் வந்தால்
மாறுமே குறத்தி
அது மண்ணிலே இயல்பாகும்
தெரியுமா குறத்தி
குறத்தி
காசு பணம் கையில் வந்தால்
என்னடா குறவா
தூசாக நினைக்கும் மனம்
தோணாதோ குறவா
குறவன்
வித்ததிலே சித்தம் வந்தா
வினோதமாக்கும்
பெரியபெரிய மனிதரெல்லாம்
சொன்னாரே குறத்தி
குறத்தி
உள்ளங்கையில் பணம்
வந்தால்
உறவெல்லாம் பகையாச்சு
உண்மையா குறவா
குறவன்
செல்வத்திலே புத்தி வச்சு
சேதமாச்சு குறத்தி மனம்
சேதமாச்சு குறத்தி
குறத்தி
காசெல்லாம் கரைஞ்சு போனா
ஏசுதே உலகம்
அது ஏனடா குறவா
குறவன்
உறவுக்கு மேலே அவர்
உயர்த்தி வச்சார் பணத்தை
குறத்தி
ஏச்சும் பேச்சும் அதனாலே குறத்தி
குறத்தி
அப்பனுக்கும் புள்ளைக்கும்
பகையாச்சுதே குறவா
அன்புக்கு இடையிலே என்னாச்சு
குறவா
குறவன்
அன்புக்கு இடையிலே
பணம் புகுந்ததால் குறத்தி
பண்பு கெட்டதே குறத்தி
குறத்தி
பொன்னும் பொருளும் வந்து
புகுந்தது ஏனோ
குறவா
புகுந்தது ஏனோ
குறவன்
ஒண்ணா ஒக்காந்து உண்ணவில்லையே
குறத்தி
இரண்டு அறையிலே இருக்கிறார்
குறத்தி
குறத்தி
வேறாக இருந்தாலும் வேரு
ஒண்ணுதானே குறவா
வேறாய்போனதேன் குறவா
குறவன்
கைபேசி என்ற கொடுங்கூற்றாலே
குறத்தி
தடுப்பாய் போனதே குறத்தி
நடுவில் வந்ததே குறத்தி
குறத்தி
நாட்டிலே நல்லது பரந்திட வேணும்
குறவா
அதுக்கு என்ன செய்யனும் குறவா
குறவன்
வீடு ஒண்னானால் குறத்தி
நாடு நன்றாகும் குறத்தி
தடுப்பு தகர்ந்தாக்க குறத்தி
அடுப்பு எரிந்திடும் குறத்தி
துடுப்பு போட்டாச்சு குறத்தி
கடுப்பு கரைந்ததே குறத்தி
பணத்தை பக்கம் சேர்க்காதே குறத்தி
குணத்தை மாற்றாதே குறத்தி
இனத்தை இகழாதே குறத்தி தன்
மானத்தை இழக்காதே குறத்தி
குறத்தி
ஆகட்டும் குறவா இப்போ
ஆகாரம் உண்ண வா குறவா
