5. அதல விதலமுத லந்த….

ராகம் : காம்போதி

குரல் : இசைவேணி பாம்பே அபர்ணா

அதல விதலமும் அமரர் உலகமும்
அறியும் உண்மை அன்பே முருகா (அ)

சோம சூரிய அக்கினியும் நீயே
சாம வேதம் முதலாம் சாத்திரம் நீயே (அ)

அணுவுக்குள் அணு நீ ஆற்றலும் நீயே
உணரும் இதய மலரும் மணமும் நீயே
தகட திமி தோம் தகட திமி தோம் என
குணமும் குரலும் கொண்ட திருப்புகழ் பாடும் (அ)

போரின் இடை வரும் பேரிசை போலவும்
காரிருள் இடையே காளியின் நடனமும்
தேரினில் அமர்ந்து தேவரின் துயரமும்
தூரமாய் போக்கிய பழனி மலை முருகா (அ)

……… பாடல் ………

அதல விதலமுத லந்தத்த லங்களென
அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென
அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென …… அங்கிபாநு
அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென
அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென
அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு …… சம்ப்ரதாயம்
உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி
ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி
லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை …… வந்துநீமுன்
உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென
மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ்
உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை …… நம்புவேனோ
ததத ததததத தந்தத்த தந்ததத
திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு …… திந்திதோதி
சகக சககெணக தந்தத்த குங்கெணக
டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
தகக தகதகக தந்தத்த தந்தகக …… என்றுதாளம்
பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக
அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு
பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண …… துங்ககாளி
பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு
கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில்
பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் …… தம்பிரானே.
219

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments