ராகம் : மோகனம்
பாதாரவிந்தம் பணிந்தேன்
பரகதிக்கு ஆதாரம் என்று
அடைந்தேன் (பா)
காதோரம் சொன்ன சொல்லை
சேதாரம் இன்றி ஜபித்தேன் (பா)
முத்த மோகன மடந்தையர்மேல்
சித்தம் யாவையும் துறந்து (பா)
அத்தன் வாழும் சிதம்பரம் தன்னிலே
சித்தம் குளிர சென்றே அமர்ந்த குமரா (பா)
வித்தம் தேடும் தோளியர் மையலில்
நித்தம் நாடும் என் தீ நெறியற்று (பா)
வேதம் புகழும் பாதா
நாதம் திகழும் நாதா
மாதை கொண்ட வேலா
போதம் கொள்ளும் உந்தன் (பா)
514ஆம் பாடல்
முத்த மோகன தத்தையி னார்குர
லொத்த வாயித சர்க்கரை யார்நகை
முத்து வாரணி பொற்குவ டார்முலை …… விலைமாதர்
மொக்கை போகசெ குத்திடு வார்பொருள்
பற்றி வேறும ழைத்திடு வார்சிலர்
முச்ச லீலிகை சொக்கிடு வாரிடர் …… கலிசூழச்
சித்தி லாடஅ ழைத்திடு வார்கவ
டுற்ற மாதர்வ லைப்புகு நாயெனை
சித்தி ஞானம்வெ ளிப்பட வேசுடர் …… மடமீதே
சித்தெ லாமொரு மித்துன தாறினம்
வைத்து நாயென ருட்பெற வேபொருள்
செப்பி யாறுமு கப்பரி வோடுணர் …… வருள்வாயே
தத்த னானத னத்தன தானெனு
டுக்கை பேரிமு ழக்கிட வேகடல்
சத்த தீவுத யித்தியர் மாளிட …… விடும்வேலா
சத்தி லோகப ரப்பர மேசுர
நிர்த்த மாடுக ழற்கரு ணாகர
தற்ப ராபர நித்தனொர் பாலுறை …… யுமைபாலா
துத்தி மார்முலை முத்தணி மோகன
பொற்ப்ர காசமு ளக்குற மான்மகள்
துப்பு வாயிதழ் வைத்தணை சோதிபொன் …… மணிமார்பா
சுட்டி நீலஇ ரத்தின மாமயி
லுற்று மேவிய ருட்புலி யூர்வளர்
சுத்த னேசசி பெற்றபெ ணாயகி …… பெருமாளே.
