ராகம் : யதுக்குல காம்போதி தாளம் : ஆதி
அருள் செய்வயே திரு முருகா
ஆண்டவனே அரி மருகா
விரி சடையோன் திரு அழகா (அ)
மயில் மீதிலே வந்து
என்மீதிலே உகந்து
மும்மலம் அகல
சம்முகன் நீயும்
மனம் மகிழவே திரு (அ)
அடியாரைப் பழித்தால் அபராதம் மிகவாகும்
நாடிடும் பிணி அவர் மீதிலே
மிகவாடும்
திரிபுரம் எரித்தவன் காமனை
பறித்தவன்
நெற்றி கண்ணிலே உதித்தவன்
நேராக வந்தே எனக்கு (அ)
பருத்த முலை கருத்த குழல்
சிறுத்த இடை வள்ளி புகழ் நாதா
அடுத்த பகை அழிக்க வரும்
தொடுத்த சக்தி வேலா இன்றே (அ)
திருப்புகழ் 1203 அடியார் மனம்..
…….. பாடல் ………
அடியார்ம னஞ்சலிக்க எவராகி லும்ப ழிக்க
அபராதம் வந்து கெட்ட …… பிணிமூடி
அனைவோரும் வந்து சிச்சி யெனநால்வ ருஞ்சி ரிக்க
அனலோட ழன்று செத்து …… விடுமாபோற்
கடையேன்ம லங்கள் முற்று மிருநோயு டன்பி டித்த
கலியோடி றந்து சுத்த …… வெளியாகிக்
களிகூர என்ற னுக்கு மயிலேறி வந்து முத்தி
கதியேற அன்பு வைத்து …… னருள்தாராய்
சடைமீது கங்கை வைத்து விடையேறு மெந்தை சுத்த
தழல்மேனி யன்சி ரித்தொர் …… புரமூணும்
தவிடாக வந்தெ திர்த்த மதனாக முஞ்சி தைத்த
தழல்பார்வை யன்ற ளித்த …… குருநாதா
மிடிதீர அண்ட ருக்கு மயிலேறி வஞ்சர் கொட்டம்
வெளியாக வந்து நிர்த்த …… மருள்வோனே
மினநூல்ம ருங்குல் பொற்பு முலைமாதி ளங்கு றத்தி
மிகுமாலொ டன்பு வைத்த …… பெருமாளே
