அபங்கம் : பண்டரிசே பூத மோடே
மொழி : மராத்தி
ராகம் : சந்ரகௌன்ஸ்
தமிழாக்கம் : வேதாந்தக்கவியோகி நாகசுந்தரம்
பாடியவர் : சீதாலட்சுமி, சென்னை
பூதமிருக்கு போகாதே
பூதமிருக்கு போகாதே
பண்டரி புரத்தில்
பெரும் பூதமிருக்கு போகாதே (பூ)
வர முடியாது திரும்ப வர முடியாது
சென்றால் திரும்ப வர முடியாது (பூ)
அரியவன் பெரும்பூதம் இருக்காம்
வெண்ணெய் மண்ணை தின்றதாம்
அவனை சென்று பார்த்தால்
கண்ணும் காதும் அகலாதாம் (பூ)
நானும் அங்கே சென்றேன்
வானாய் நிறைந்து விட்டேன்
திரும்பவும் வரவில்லை
பெரும்பூதம தின்றதென்னை (பூ)

Excellent!