நேற்றைய நினைவுகளை தொலைத்து விடேன்,
இன்றைய தொடக்கம் நன்றாக இருக்கட்டும்.
நாளையின் நினைவுகளை தொலைத்து விடேன்
இன்றைய பொழுது இனிமையாய் கழியட்டும்.
காதலின் நினைவுகளை தொலைத்து விடேன்,
அவளாவது நிம்மதியாய் இருக்கட்டும்
துரோகத்தின் நினைவுகளை தொலைத்து விடேன்,
மனதின் வலியாவது ஆறட்டும்
துக்கத்தின் நினைவுகளை தொலைத்து விடேன்
தொடர்வது இன்பமாய் இருக்கட்டும்.
முதுமையின் நினைவுகளை தொலைத்து விடேன்
இளமையின் துள்ளல் துவங்கட்டும்.
