மகனே என்னை மன்னித்து விடு
பத்து மாதம் வயிற்றில்
சுமக்காததற்கு!
மகனே என்னை மன்னித்து விடு,
இரத்தத்தை தாய்ப் பாலாய்
தராமல் இருந்ததற்கு!
மகனே என்னை மன்னித்து விடு,
விளையாடும் பருவத்திலே
பள்ளிக்கு அனுப்பியதற்கு!
மகனே என்னை மன்னித்து விடு,
நண்பருடன் ஊர் சுற்ற
தடைக்கல்லை போட்டதற்கு!
மகனே என்னை மன்னித்து விடு,
உத்தியோகம் பார் என்று
அதிகாரம் செய்ததற்கு!
மகனே என்னை மன்னித்து விடு,
காதலா என்று கேட்காமல்
கல்யாணம் செய்து வைத்ததற்கு!
மகனே என்னை மன்னித்து விடு,
இத்தனைக்கும் பதிலாக
என்னையே நான் தந்தேன்
வயதான போதென்னை
விட்டு விட்டுப் பிரியாதே!
சுமந்த தோளிதை
சுமையாக நினையாதே!
கை பிடித்து என்னை
கரையேற்றி வைத்து விடு!
