உள்ளே திரும்பிப் பாரு
உனக்குள்ளே திரும்பிப் பாரு🌺
ஓங்காரத்தோடு ஒரு பிள்ளை
உட்கார்ந்து இருப்பதைப் பாரு!🌺
வெளியே காண்பதெல்லாம் வெளி வேஷம்🌺
களித்தாட்டம் போடுவதெல்லாம் கலி தோஷம்🌺
பொறிபுலன்கள் எல்லாம் பிடித்திழுக்கும்
பாரும் 🌺
அறியாமை இன்னும் அகன்று போகக் காணும்🌺
தாபதிரையத்தோடு தினம் தினம் வெகு போரு🌺
ஆபத்பாந்தவன் அருகில் இருக்கிறான் அதைத் தேடு🌺
சுத்த சொரூபத்தை தினம் தியானம் பண்ணனும்🌺
அத்தனையும் அறிவுக்குள்ளே ஆராயிந்து பார்க்கணும்🌺
மெத்தப் படிப்பெல்லாம் மேதையாய் ஆக்கலாம்🌺
பத்தி பண்ணினால் போதும் பக்குவம் தேறலாம்🌺
யுக்தியினால் உனக்குள்ளே யோகனிலை கூடலாம்🌺
குயுக்தி பண்ணி பேசினால் ஒரு கற்ப காலம் ஆகலாம்🌺
நானென்று ஒரு ஸ்புரணம் தனக்குள்ளே இருக்குது🌺
காண் என்று குரு சொன்னால் தக்ஷணம் தோணுது🌺
வீணாய் பல கார்யம் வியர்த்தமாய் செய்கிறாய்🌺
தேனாய் பெரும் இன்பம் காணாது தொலைக்கிறாய்🌺
சம்சார நோயிக்கு சூரணம் நீ கண்டு தேறணும்🌺
அம்மா என்ற ஒரு மந்திரம் அக்ஷர லக்ஷம் பண்ணனும்🌺
திரும்பவும் ஏனிங்கு தரணியில் வந்து பிறக்கணும்🌺
அற்புதமான கற்பக ஆனையை நினைந்து உருகணும்🌺
நெருப்பு பத்திக்கொண்டால் நின்று கொண்டிருப்பாயோ🌺
கருப்பத்தில் மீண்டும் பிறந்திட கட்டம் குறித்திடுவாயோ🌺
எங்கேயும் ஓட வேண்டாம் உனக்குள்ளே திரும்பணும்🌺
சங்கை எதுவுமில்லை பஞ்சாங்கம் ஏன் பார்க்கணும்🌺
நம: என்று சொல்லி நானில்லை என்று கூறணும்🌺
சம தம குணங்களை சேர்த்து வைத்து கொள்ளணும்🌺
அலைந்து திரிந்தது அத்தனையும் போறும்🌺
நிலையாக உனக்குள்ளே நிட்டயும் கை கூடும்🌺
ஜட பரதன் போலிங்கு ஜன்மா இல்லாமல் ஆகணும்🌺
மூட மனதிற்கு மிக்க விஷயங்கள் ஏன் தூவணும்🌺
சாத்திரம் பலகோடி படித்திட போறுமோ காலம்🌺
காத்திரமாக குரு காதோரம் சொன்னால் போதும்🌺
வாக்கியம் நாலிலே ஒன்றைப் பிடித்துக் கொண்டால் போதும்🌺
பாக்கியெல்லாம் பறந்து தானே வந்து குவிந்திடும் பாரும்🌺
ஆக்கிய சோறுக்கு அவிஞ்சனம் ஐந்து புலன்கள்🌺
நோக்கிய நோக்கொன்றில் அஞ்ஞானம் போக்குங்கள்🌺
இணை சேர்த்து அழகாகும் இதயத்தில் ஓர் ஞானம்🌺
அனவரதம் அதனை அனுசரிப்பதே ருதம்பரா ஞானம்🌺
சபைக்குள் ஒரு ஈசன் சந்ததம் நடனமாடுறான்🌺
அபயம் தந்து அருளிட நித்தம் நம்முள் இருக்கிறான்🌺

கருத்துகள் அருமை
நன்றி. நமஸ்காரம்.