பேசாதிரு மனமே
எழுத்து : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம்
பாடியவர் : ஶ்ரீமதி அபர்ணா, மும்பை
ராகம் : நாதனாமக்ரியா தாளம் : ஆதி
பேசாதிரு மனமே நீ பேசாதிரு மனமே
பொய்யான உலகத்தை மெய்யென்று எண்ணாமல் (பே)
வேசம் இவ்வுலகம் நாசமாவது திண்ணம்
கூசாமல் ஏசும் கூற்றுக்கு இரையாகும் (பே)
ஆசைப்பட்டுலகில் அலைந்ததெல்லாம் போதும்
வீசைக்கும் பயனில்லை வெட்டியான் கைக் கோலாகும்
பாசம் வைத்துழலாதே பாதையை மாற்றிக் கொள்ளாதே
தூசாய் எண்ணியே தரணியிதை என்றும் தேராதே (பே)
நிலையில்லை என்று நாலு வேதம் சொல்லுதே
வலையில் விழாதே என்று வாக்கினால் சொல்லுதே
தலையில் வைத்து தாங்க எதுவுமில்லை என்று
அலையாமல் உன்னுள்ளே ஏகாந்தமாகவே நின்று (பே)
