தன்னை அறிய வேண்டும்
ராகம் : சங்கராபரணம்
தன்னை அறிய வேண்டும் தரணியில்
என்ன வேண்டுமானாலும் செய்து (த)
மண்ணிலே பிறக்காமல் இறக்காமல் இருக்கவும்
எண்ணிலா கடமையில் கிடந்துழலாமல் இருக்கவும் (த)
ஆயிரம் சாத்திரம் அறிந்தாலும் அடையாது
பாயிரம் பலவும் பாடினாலும் புரக்காது
வாயினால் மந்திரம் ஜபித்தாலும் லபிக்காது
மாய்கையை வென்றிட மகத்துக்கள் சொன்னபடி (த)
ஐம்புலன் தன்னை அடக்குவதோ ஆகாது
கிம்புருடர் கின்னரர் தேடியும் கிடைக்காது
அம்பிகை அருளால் அகத்துள்ளே அமிழ்ந்து
நம்பிக்கை வைத்து நல்குரு சொன்னபடி (த)
(கவியோகி)
