என் பெயரில் அழகு இருக்கிறது,
ஆனால் நான் அழகானவனா என்பது
எனக்குத் தெரியாது!
நான் குறைவாகப் பேசுவேன் என்கிறார்கள்,
ஆனால் நான் யாரையும்
குறைவாகப் பேசுவதில்லை!
பொதுவாக நான் யாருக்கும் சென்று
வலிய உதவி செய்தவனில்லை,
ஆனால்
நான் யாருக்கும் கேட்ட உதவிகளை
மறுத்தவன் இல்லை!
எனக்கு கூட்டம் பிடிக்காது ஆனால்
தனிமையும் பிடிக்காதே!
என்ன செய்வது?
எனக்கு சாமர்த்தியம் இல்லை
என்கிறார்கள்,
தர்மத்திற்கு புறம்பானது சாமர்த்தியம்
என்றால் அந்த சாமர்த்தியம் எனக்கு வேண்டாம்!
நான் வேதாந்தி என்று விமர்சிக்கிறார்கள்,
உண்மையில் நான் தன்னை உள் நோக்கும்
தன்னலம் மிகுந்த அக்ஞானிதான் நான்!
அதிக நேரம் அந்தர்முகமாகவே இருப்பதால் என்னவோ
பஹிர்முக சு துர்லபா எனக்கு
எளிதாகத் தோன்றுகிறாள்!
அருளின் சக்தி என்னை எப்போதும்
ஆட்டுவிப்பதால் எனக்கு கொஞ்சம்
சொந்த மூளை கிடையாது!
இதுநாள் வரைக்கும்
சாப்பிடும்போது சுவை
பார்த்தவனில்லை நான்!
ஆனால் இப்போதெல்லாம்
சாப்பிடுபவர்களுக்கு சுவை
வேண்டும் என்று விரும்பி சமைக்கிறேன்!
அகவை கடந்து விட்டது இன்று,
ஆனாலும் (தேங்காய்)
துகயலில் ஆசை விடவேண்டுமே!
வேதம் முழுதும் படித்தவன் இல்லை,
ஆனால் வேதத்தின் உட்பொருளை
ஓரளவு உணர்ந்தவன், அது
பாரத தேசத்தில் பிறந்ததின் விளைவு!
நாம் உ.வே. சா.வின் உறவினர்
என்பார் என் தந்தையார்,
தமிழர்கள் அனைவரும் அப்படி
சொல்ல வேண்டும் என்பதே என் எண்ணம்!
ஐம்பத்து மூன்று அகவையில் அனைவரையும்
வணங்குகிறேன்!
வாழ்த்துங்கள்,
அகத்தில் அகங்காரம்
அழிய வேண்டும் என!
இவண்,
வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம்
29.12.2021

மிக அருமை
நன்றி மாமி !
மிக அருமை சுந்தர கவியோகியாரே. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
நன்றி மன்னி !
Pirandhanal namaskarangal anna
தாங்க்ஸ் அபர்ணா