இரண்டாயிரத்து இருபத்து இரண்டு !
இருண்ட உலகம் வரட்டும் மீண்டு!
நோய் மிரட்டல் மீண்டும் எதற்கு?
போய் விடட்டும் பதட்டம் அகன்று!
எடுத்து விட்டோம் பயணச் சீட்டு!
தடுத்திடுமோ அரசின் நோட்டு!
இருபத்து இருபது முதலாய்
ஒரு இடமும் நகரா தொல்லை!
வரும் வருடம் இடைவெளி தாயேன்
பரபரக்க வைத்திடும் நோயேன்?
மகத்துக்கள் எவரையோ உலகம்
அவமதிப்பு செய்ததால் கலகம்!
சிவாபராதம் தந்திடும் தண்டனை!
சிவசிவ என்றால் நீ மீண்டனை!
உதவி செய்ய உலகம் அறிந்தது!
பதவி மோகம் பக்கம் அகன்றது!
வரும் வருடம் இருபத்து இரண்டு
தரும் நமக்கு தத்துவ நிகண்டு!
அன்புடன் வாழ்வோம் மகிழ்ந்து!
என்புடல் ஆகட்டும் உவந்து!
(கவியோகி நாகசுந்தரம்)

மிக்க நன்று. வாழ்த்துக்கள் என்றென்றும்.