சந்திர பாகாவில் ஓர் சலசலப்பு!
நதியின்
ஓட்டத்தில் சலசலப்பு
கேட்குமாம்.
இங்கோ
பாகவதர்களின் பாடல்களின்
சரிகமபாவும் சேர்ந்து
ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
நதியில் மூழ்கினால்
புண்ணியமாம்.
இங்கோ
பாகவதர்களின் பாடல்களில்
பக்தியும் அல்லவா
சேர்ந்து விடுகிறது!
இந்த நதியில்
கற்கள் மட்டும்
கிடப்பதில்லை, மேலாக
நாமதேவரின்
நாம ரசக் கற்களும்
சேர்ந்தல்லவா கிடக்கிறது!
பொதுவாக நதிக்கரையில்
கடைகள் இருக்கும்,
இங்கோ
மற்ற கடைகளுடன் கூட
பக்தி ரசக் கடைகளும் சேர்த்தே
விரிக்கப்பட்டுள்ளது!
விட்டலனின் ஆலயத்தில்
அவனுக்கு மட்டுமே
அபிஷேகம்!
இங்கோ
அவனை தன்னுள் கொண்ட
பக்தர்களுக்கும் சேர்த்து
அபிஷேகம்!
இதனால்
இதற்கு சந்திர பாகா என்ற பெயர் பொருத்தம்தான்,
இரண்டு இரண்டு பாகங்களாக
நன்மை தருகிறதே!
