வேசம் எல்லாம் கண்ணே, போக வேண்டாம் சொன்னேன்!

தற்காலத்தில் போலியான உருவங்களில் மயக்கும் பொய்யர்களிடம் மயங்கி விழுந்துள்ளார் மக்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கவி முயல்கிறார்.

“மாடு மேய்க்கும் கண்ணே” மெட்டில் பாடலாம்

கவி:

வேசம் எல்லாம் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்

ஏமாறும் மனிதர்:

போக வேணும் கவியே
தடை சொல்லாதே நீயே

கவி:

மெய்யான நூலு தரேன்; வலுவான மனமும் தரேன்
கை நிறைய கவிதை தரேன்:
பொய்யினிலே மயங்க வேண்டாம்
(வேசம் எல்லாம் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்)

ஏமாறும் மனிதர்:

மெய்யான நூலு வேண்டாம்; வலுவான மனமும் வேண்டாம்
உல்லாசமாய் ஆடி விட்டு ஒரு நொடியில் திரும்பிடுவேன்;
(போக வேணும் கவியே – தடை சொல்லாதே நீயே) 1

கவி:

கூவம் நதிக் கரையில் எப்பொழுதும் பொய்யர் மயம்
பொய்யான உருவத்தினில்
மயக்கிடும் உன்னை என்றும்
(வேசம் எல்லாம் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்)

ஏமாறும் மனிதர்:

ஊடகத்தில் உண்மை உண்டோ?
கண்டபடி சொல்லும் கவியே?
உள்ளபடி சொன்னாலும் நான்
கண்டவர்கள் காலில் விழுவேன்!
(போக வேணும் கவியே – தடை சொல்லாதே நீயே) 2

கவி:

உருவத்தில் உண்மை இல்லை
கருவத்தில் நிகருமில்லை
கண்டபடி உளருவதில் காண்போர்கள்
மயங்கிடுவார்
(வேசம் எல்லாம் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்)

ஏமாறும் மனிதர்:

கடவுளரின் அவதாரம் சொல்வதெல்லாம் உண்மை ஆகும்
கூட்டம் கூட்டமாக நாங்கள் காலினிலே விழுவோம் ஐயா
(போக வேணும் கவியே – தடை சொல்லாதே நீயே) 3

கவி:

கோயில் வாழும் கடவுளவர் கொள்கையிலே உள்ளாரப்பா
வாயில் வந்தபடி உளரும்
வேசக்காரர் வசத்தில் இல்லை
(வேசம் எல்லாம் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்)

ஏமாறும் மனிதர்:

எல்லாரும் காலில் விழ எனக்கு மட்டும் ஏனோ தடை?
ஆடி ஓடி அருளைத் தரும் அம்மா அப்பா அவர்கள்தானே!
(போக வேணும் கவியே – தடை சொல்லாதே நீயே) 4

213

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
6 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Parvathi Ganesan
Parvathi Ganesan
1 year ago

அருமையான கவிதையினை படைத்தவருக்கு வாழ்த்துக்களை நானும் சொன்னேன்

உஷா ஜயகுமார்
உஷா ஜயகுமார்
1 year ago

சூப்பர் கவிதை சுந்தர் – வாழ்த்துக்கள்

Saranya Karthick
Saranya Karthick
1 year ago

Very nice asusual