இடியோ இடிக்கிறது,
செவிக்கொன்றும் ஆகவில்லை!
மின்னல் வெட்டுகிறது,
விழிக்கொன்றும் ஆகவில்லை!
மழையோ பொழிகிறது,
மேனிக்கொன்றும் ஆகவில்லை!
ஆற்றிலே பெரும் வெள்ளம்,
அடித்துச் செல்லவில்லை!
என்னமோ தெரியாது,
உந்தன் புன்சிரிப்பால்
செவியோ குளிர்கிறது,
கண்ணோ குவிகிறது,
மேனி மலர்கிறது
புன்சிரிப்பு வெள்ளமோ
முழுதும்
அடித்துச் செல்கிறது!
போதும் உந்தன் புன்சிரிப்பு
பேரிடர் மேலாண்மைக்கு
போன் செய்ய வைத்திடாதே!
