கண்ணிற்கு ஒளி கிடைக்க,
செவிக்கு ஒலி கிடைக்க,
நாசிக்கு மூச்சு கிடைக்க,
வாய்க்கு ருசி கிடைக்க,
உடலுக்கு உணர்ச்சி கிடைக்க,
பிறப்பு நிகழ்கிறது!
அது நம் கையில் இல்லை!
கண்ணின் ஒளி மங்க,
செவியின் ஒலி இழக்க,
நாசியில் மூச்சிழக்க,
வாயில் ருசி நசிக்க,
உடலின் உறுதி கெட,
இறப்பு நிகழ்கிறது!
அதுவும் நம்கையில் இல்லை!
ஆனால்
கண்ணால் எதைப்பார்ப்பது?
செவியால் எதைக் கேட்பது?
நாசியால் எப்படி மூச்சு விடுவது?
வாயால் எதை ருசிப்பது?
உடலால் எதை உணர்வது?
இதெல்லாம் சரியானால்,
வாழ்வு நம் கையில்!

ரொம்ப அருமை
மிக்க நன்றி, நமஸ்காரம்
Beautiful message, to be followed by every individual for a healthy life.
Namaskarams.
மிக்க நன்றி