*மனமே உனக்கு ஏன் இன்னும் மனக்கவலை?
ராகம் : சாமா
மனமே உனக்கு ஏன் இன்னும் மனக்கவலை?
தனமாக தற்பரன் இருக்கிறானே தில்லையில்! (ம)
குணம் மிகுந்தவன் குற்றம் களைபவன்
கணங்கள் சூழ்ந்தவன் கருணை உள்ளவன் (ம)
எத்தனை பாபங்கள் தெரியாமல் செய்தாலும்
அத்தனையும் போகும் அத்தனை வணங்கினால்
சித்தனை சிவனை சுந்தரனை சித்தத்தில்
பொத்தி வைத்து பக்குவமாக பூஜித்திட (ம)
வருவான் வந்து துன்பம் களைவான்
புகுவான் நின்றனவும் போக்கிடுவான்
ஒருவேளை யாகிலும் உன்மனம் தன்னில்
தருவித்தால் தீராத வினை நொடியில் தீருமே (ம)
(எழுத்து : கவியோகி நாகசுந்தரம்
பாடியவர் : இசைவேணி அபர்ணா)
