கண்ணே என்னை மயக்காதே
காட்சியைக் காட்டிக் கொல்லாதே
காதே என்னை மயக்காதே
கேட்கும் ஒலியினில் செல்லாதே
மூக்கே என்னை மயக்காதே
முகரும் மணத்தில் மூழ்காதே
வாயே என்னை மயக்காதே
உணவிலும் பேச்சிலும் ஒழுகாதே
மெய்யே என்னை மயக்காதே
தொட்டுத் தொட்டுத் துவளாதே
ஐம்புலன் என்னும் மாய வலை
அதில் மாட்டிக்கொள்ளும் மனித மனம்
எம்புதோல் உடம்பு நிலையில்லை
துன்பத்திற்கு உண்டோ ஏதும் எல்லை
அன்பும் பண்புமே கூட வரும்
வம்புதான் செய்யும் நம் மாய மனம்
வாதம் வேண்டாம் ஊழ்வினை சூழும்
வேதம் உணர்ந்தால் வினை மாளும்
மறைகள் நான்கின் வாக்கியங்கள்
திரைகள் தன்னை விலக்கி விடும்
கும்பிட வேண்டும் நம் குல தெய்வம்
நம்பிக்கை வைத்தால் நலம் விளையும்
தும்பிக்கை யானின் துணை கூடும்
அம்ருதம் அவனின் அருள் மந்த்ரம்

அருமையாக உள்ளது.
மிக்க நன்றி
Sir