இன்பமும் துன்பமும் இரட்டைக் கிளவி
இன்பம் இருந்தால் துன்பமும் இருக்கும்
நல்லிசை கேட்டல் செவியினுக்கின்பம்
மெல்லிசை பிசகின் மிகவும் துன்பம்
அறுசுவை உணவு நாக்கிற்கின்பம்
உப்பைக் கொட்டின் உவ்வே துன்பம்
முகரும் கனிகள் மணமே இன்பம்
பகலில் வைக்க அழுகும் துன்பம்
மனைவியின் பேச்சு மனதிற்கின்பம்
தினமும் ஏசினால் தீரா துன்பம்
பண வரவாயின் மனையினுக் கின்பம்
கணத்தில் கழியும் செலவினில் துன்பம்
தீந்தமிழ்க் கவிதை வாசிக்க இன்பம்
நிந்தனை செய்யின் நாளும் துன்பம்
திருடித் தின்பது குரங்கினுக் கின்பம்
உள்ளலும் கூட மனிதர்க்கு துன்பம்
வாசிட்டம் படித்தவன் இஷ்வாகு இராமன்
கோசலை புதல்வன் ஒன்றாய்க் கண்டவன்
அயோத்தி அகலுக என்றாலும் அதிரான்
இந்தாவுன் மகுடம் என்றாலும் மகிழான்
இதுவே நமக்கு இராமாயணப் பாடம்
பொதுவே இன்பமும் துன்பமும் நோக்கம்
சரிசமமாக இரண்டையும் பார்த்தல்
பரிபக்குவமும் மனதில் தோன்றும்
மனிதன் வாழ்வில் இதுவே நோக்கம்
சனியும் பாம்பும் சாத்திர ஆக்கம்
நான்மறை வார்த்தை நம்மிடர் போக்கும்
வானுறை வேந்தர் வாழிட அருள்வர்
இன்பம் வந்தால் துன்பத்தை நினைக்க
துன்பம் நேரிட இன்பத்தைக் கொள்க
இப்படி வாழ்ந்தால் இரண்டும் ஒன்றே
ஒப்பிலி ஆண்டவன் உணர்வினைக் காண்க
கவிதை இதனில் கருத்தினை சொன்னேன்
பவித்திடும் பரம ஆனந்தம் பாரில்

Beautifully described I a very easy language to understand. Best wishes Sundar.
மிக்க நன்றி
மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
மிக்க நன்றி