இளையராஜாவின் இசை விண்வெளியில் இசைக்கப்படப் போகிறது – செய்தி
உன்னிலும் என்னிலும்
உள்ளே போன இவரின்
வயலின் இசை இன்று
வானவர் நாட்டிலும்
வீசப் போகிறது!
வேண்டாம், எனக்கு பயமாய் இருக்கிறது,
இவரின் இசை கேட்டு
வானவர்கள் அதனை
காப்பி அடித்துவிடப்போகிறார்கள்!
இவரின் பாடல்கள்
மண்ணில் மட்டும் இல்லை
விண்ணிலும் பாயப்போகிறது!
வேண்டாம், எனக்கு பயமாய் இருக்கிறது,
இவரின் இசை கேட்டு
விண்வெளி வீரர்கள்
உற்சாகத்தில்
குதித்து விட்டால்
விண்கலம் என்னாவது?
இவர் நிலாவிற்கென்றே
இசையமைத்த
பாடல்கள்
நிலாவில் கேட்கப்
போகிறது!
வேண்டாம், எனக்கு பயமாய் இருக்கிறது,
என் இனிய பொன் நிலா
கேட்ட வெண்ணிலா
மண்ணில் இறங்கி விட்டால்
இரவில் வெளிச்சத்திற்கு
என்ன செய்வது?
இவரின் இசை
வான் மேகத்தில்
பாயப்போகிறது!
வேண்டாம், எனக்கு பயமாய் இருக்கிறது
இசை இடி பட்ட மேகங்கள்
மழையைப் பொழிந்தால்
என்ன செய்வது,
இன்னொரு வெள்ளத்தை
சென்னை தாங்காது!
இனி இவரின்
இசைவானில் பாடல்இசை
வானில்!
வேண்டாம், எனக்கு பயமாய் இருக்கிறது
இனி எல்லோரும்
மின்னல்களைப் பார்த்து
மியூசிக் பவுண்டைன்
என்று நினைத்து விடக்கூடும்!
(கவியோகி நாகசுந்தரம்)
