தோட்டத்தில் நின்று
கொண்டிருந்தேன்
காதலியே உனக்காக!
மணம் வீசியது,
மலர்களால் அல்ல,
நீ வருவதன் அறிவிப்பு!
நீ பிரிந்து செல்லும் போது
உள்ள சோகம்
உனக்காக
காத்திருப்பதில் உள்ள
சுகத்தை மறக்கடித்து விடுகிறது!
உனது அருகாமையில்
உலகம் மறந்து விடுகிறது!
விலகி சென்றாலோ
உன்னினைவில்
உலகம் மறந்து விடுகிறது!
எனவே எப்போதும்
உலகம் ஒன்று இருப்பதே
தெரிவதில்லை!
உனது எதிர்பார்ப்பில்
ஒரு நிமிடம் யுகமாய்க் கழிகிறது
பிரிந்து சென்றாலோ
பல யுகங்களாய்க் கழிகிறது
எப்படியோ
பல யுகங்கள் உன்னால்
நான் வாழ்ந்து விடுகிறேன்!

Super very nice and clear to understand as usual keep rocking