பெண்ணுக்குத் திருமணம் பாரறிய நடத்தணும்!
பிள்ளைக்கு நல் புத்திவந்து
ஊரெல்லாம் போற்றணும்!
மனையாளும் எந்நாளும் எந்தன்
மனசறிஞ்சு நடக்கணும்!
செய்யும் தொழிலிலே
செல்வாக்கு கூடணும்!
எழுதும் கவிதையிலே
இலக்கணம் வந்தமையணும்!
நாளைக்கு பொழுது வந்து
நல்லபடி விடியணும்!
இப்படியே பல கவலை
ஏராளம் தள்ளணும்!
சீ சீ என் மனமே நீ ஏன்
கவலை கொள்ளணும்?
இறைவன் என்று
ஒரு தலைவன் இருப்பதை நீ ஏன்
மறக்கணும்?
அடுத்த நிமிடம் நடப்பதெல்லாம்
அவனேதான் தீர் மானிக்கணும்!
கவலையற்று உறங்கிவிடு
காலையில் கண் முழிக்கணும்!

சரி. கவலையற்று உறங்குவோம்
Arumai
சூப்பர்.
அதை பின்பற்றுவோம்