விட்டலன் நாமம் என்னும் இனிக்கும் கற்கண்டு ரசமிருக்க
எட்டி போல் கசக்கும் இந்த சம்சார இலையில் ஏன் உனக்காசை?
நாமதேவர் ஏகனாதர் நன்றாய் ருசித்த பழம்
ஞானதேவர் மீராபாய் தனக்குள் புசித்த பழம்
விட்டலா விட்டலா என்றால் விட்டு விடும் வினையெல்லாம்
விட்டலா விட்டலா என்றால் சம்சாரக் கட்டவிழும்
தொட்டதெல்லாம் பொன்னாக்கும் பரிச வேதி தூசாகும்
அட்டமா சித்தியெல்லாம் அடிபணிந்து எளிதாகும்
சொல்லுங்கள் சொல்லுங்கள் விட்டலா விட்டலா என்று
எண்ணுங்கள் எண்ணுங்கள் ஏகாந்த மாகவே நின்று
பண்ணுங்கள் பண்ணுங்கள் பரமனிடம் பக்தி கொண்டு
தள்ளுங்கள் தள்ளுங்கள் பக்தர்கள் வருகிறார் பாருங்கள்

அருமையாக உள்ளது…