சொல்வதற்கென்ன கூச்சம்?
ஹரி விட்டலா என்றால் போகும் பாபம்!
வீணாய் பல பேச்சு பேசும் வியனுலகம்
தானாய் வரவேண்டும் திருபண்டரிபுரம்
நாவில் உரைத்தால் நல்ல பண்பு வரும்
கோவில் தரிசனம் கோடி பலன் தரும்
மாவிலைத் தோரணம் மங்கள வாத்தியம்
கூவித் தினம்சொல்லு கோவிந்தா ஹரி விட்டலா
வாய் கொடுத்தது வீண் பேச்சுக்கல்ல இந்த
மெய் கொடுத்தது பொய் வாழ்வுக்கல்ல
தாயில் சிறந்த தயாபரன் இணையல்ல
கோயில் திறந்தாச்சு கூட்டம் மெல்ல வர
