பண்டரிபுரம் போகுது பார் பக்தர் கூட்டம்
கண்டால் போதும் முக்தி கை கூடும்
நாமதேவர் துக்காராமும் நடந்து செல்கிறார்
ஆமாம் அவர்கள் கீதகானம் பாடி செல்கிறார்
ஜனாபாயும் கண்ணனையே அணைத்து செல்கிறாள்
ஜனங்கள் அவர் பின்னே சென்று கோஷம் போடுறார்
வனத்தைப் போல சம்சாரம் தாண்டிச் செல்கிறார்
இனத்தோடு இனம் சேரும் இதமாய் பாடுறார்
பஜனை செய்து பாக்களையே பாடி செல்கிறார்
பஜனை என்றால் ஆன்மநாட்டம் அறிந்து கொள்கிறார்
நிஜமான சொரூபத்தை உள்ளே காண்கிறார்
அஜாமிளன் அவரைப்போல நாமும் ஆகலாம்
