மெட்டு : பாரத தேசமென்று….
பல்லவி
பண்டரி புரமென்று பெயர்சொல்லு வார் – கடி துயர்வெல்லுவார் பரதுதிசெய்குவார்
சரணங்கள்
அள்ளி அணைத்தவனின் அருள் பெருவோம் –
அடிகாலைத் தினம் தொழுது அரவணைப்போம்
கள்ளன் அவன் பெயரை தினம் ஓதுவோம்
எங்கள் பார்த்த சாரதிக்கு பணி செய்குவோம். (பண்டரி)
பங்கயத் திருவினுக்கோர் பாலம் அமைப்போம், பாதுகை மேலுயர்த்து விதி சமைப்போம். பாகாவில் ஓடிவரும் நீரின்
மிகையால் வையத்து நாடுகளில் வரம் கொடுப்போம் (பண்டரி)
பட்டுத் துணிகள் செய்து அங்கம் முதலாய் வேறு பல பொருளும் படைத்திடுவோம்
எட்டுத் திசைகளிலுஞ் சென்றவன் மண்ணில் புகழ தொண்டு செய்குவோம்
(பண்டரி)
முத்து மாணிக்கங்கள் அவன் உடலிலே கொய்து மணிகளை தான் படைப்போம்
உய்யும் வகை தெரிந்து அவன் உண்மை உரு காணுவோம் (பண்டரி)
சிந்தும் பக்தி நீரால் நனைத்திடுவோம் அவன் சீரான பெயர் சொல்லி சுகம் பெறுவோம்
பற்றும் வினையதனை புறம் தள்ளுவோம் எங்கள் பரமனிவனென்று புகழ் அடைவோம் (பண்டரி)
அடியார் அவர் தொழும் பண்டரி நாதன் அவன் அடியைப் பணிந்து துயர் பயம் வெல்லுவோம்
விடியும் வரையவன் வேதம் படிப்போம் நாமதேவர் முதல் நாமம் சொல்லுவோம் (பண்டரி)
ஜனாபாய்க்கு அவன் உடையைத் தந்தான் ஜன்மத் துயரையெல்லாம் அடித்துடைப்பான்
மீராவின் வீணையிலே மதம் கொள்ளுவான் மண்ணிதில் ஈடெதும் அவனுக்கில்லை (பண்டரி)
