எனக்கு மட்டும் ஏன் இந்த ஒர வஞ்சனை கோவிந்தா கோபாலா
கணக்கில்லா பக்தருக்கு அருளைத் தந்தாயே கோவிந்தா கோபாலா
நாமதேவர் நல்லபடி நாமம் கொண்டார் கோவிந்தா கோபாலா
கபீர்தாசர் காலடியில் பொருள் கண்டார் கோவிந்தா கோபாலா
ஏகனாதர் எந்நாளும் உன் சேவை ஏற்றார் கோவிந்தா கோபாலா
தாகம் மிகுந்த எனக்கு எப்போதருள் செய்வாய் கோவிந்தா கோபாலா
அடிமை கொள்ள இன்னும் மனம் உனக்கு வல்லையா கோவிந்தா கோபாலா
படிப்பு பக்தி இல்லை என்று பாராமுகமா கோவிந்தா கோபாலா
விடியலிலே விழிக்க வில்லை என்று கோபமா கோவிந்தா கோபாலா
துடித்து நிற்கும் என்னை பார்த்து இரக்கம் இல்லையா கோவிந்தா கோபாலா
