பால் குடிக்க வா கண்ணா மால் வண்ணா
என்னை படுத்தாமல் பால் குடிக்க வா கண்ணா (பா)
ஏலக்காய் லவங்கம் எல்லாம் போட்டு தரேன்
கால் கடுக்க என்னால் ஓடி வர முடியாது (பா)
நாள் முழுதும் ஓடி நன்றாய் களைத்து விட்டாய்
வாளாய் இருப்பதுவோ உன்னால் முடியாதே
காளை பசு மாடுகளை மேய்த்து வந்தாயே
ஆளைக் காணலையே அருகில் வருவாயே (பா)
ராதிகாவும் வந்து விட்டாள்
கோபியர்கள் கூடி விட்டார்
ஏது உனக்கு பிடிவாதம்
வாது செய்தது போதும் (பா)
