வரம் கொடுப்பாயோ வாமனா எனக்கு வரம் கொடுப்பாயோ
மகாபலியிடம் வரம் கேட்ட வாமனா
(வ)
நாமதேவர் வைராக்கியம் நல்கிடுவாயோ
ஏகநாதர் ஏகாந்தம் எனக்கு பொங்கி வருமோ
(வ)
ஞான தேவர் ஞானம் வேண்டும் எனக்கு
தருவதிலே உனக்கு உண்டோ விருப்பு
கானம் பாடும் கோராகும்பர் இருப்பு
தானமாக தருவாயா மனசுக்குள்ளே நிறைவு (வ)
குணம் தருவாய் நல்
மணம் வீசும்
மனம் தருவாய்,
இல்லத்தில்
இனிது வாழ
இனம் தருவாய்,
அனவரதம் உனை மறவா
மனம் தருவாய் (வ)
