(மிளிர வாழ்த்துபவர் : கவியோகி நாகசுந்தரம்)
அமைதியை விரும்பு அன்பனே!
யுத்தம் செய்ய உன்னிடம் ஆயுதம் இருக்கலாம், ஆனால்
அன்பு என்ற ஆயுதம் அதை விட வலிமையானது!
பீரங்கிகளை சத்தமாக நீங்கள் இயக்கலாம், ஆனால்
சாரங்கிகளின் சுவரம் அதைவிட
இனிமையானது!
துப்பாக்கிகளுடன் நடப்பது வீரமல்ல,
அமைதியாய் தோளில் கைபோட்டு நடப்பவரே
பாக்கியம் மிகுந்த வீரர்கள்!
எல்லைகளை விரிவாக்க
படைகளை நிறுத்தாதீர்கள்!
ஏனென்றால் மனித நேயம்
எல்லைகள் அற்றது!
நாடுகளின் எல்லைக் கோடுகள்
கூகுள் மேப்பில் மட்டும் இருக்கட்டும்
அதை தயவு செய்து கூறு போடாதீர்கள்!
விமானப் படை விமானங்கள்,
பசிக்கு வாடும் நாட்டு மக்களுக்கு
உணவுப் பொட்டலங்கள் போட மட்டும்
பறக்கட்டும்! குண்டுகளை போடும் கிடங்காக அதை மாற்ற வேண்டாம்!
விஞ்ஞானம் வளரட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை, அதோடு கூட மனிதத்தின் மீது சிறிது அக்ஞானமும் வளரட்டும்!
அன்பிற்கும் அறிவிற்கும் நோபல் பரிசு கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள், உள்ளத்திலும் அதை சற்று உணருங்கள்!
உலகிற்கு ஒரு வேண்டுகோள்!
சகோதரத்துவத்துக்கு பச்சை கொடி காட்டுங்கள்,
அமைதிக்கு வெண் கொடி காட்டுங்கள்,
போர் விமானங்களுக்கு சற்று ஓய்வு கொடுங்கள்,
வானில் இனி புறாக்கள் மட்டும் பறக்கட்டும்
இல்லாவிட்டால் இறப்பது மனிதர்கள் மட்டுமல்ல, மனித நேயமும்தான்!
உங்கள் விலை உயர்ந்த ஆடையோடு கூட மனித நேயமும் சற்று மிளிரட்டும்!

கடைசி வரி மகுடமாகத் திகழ்கிறது
மகுடம் சூட்டியதற்கு நன்றி நண்பரே
மனதை உருக்கிய வரிகள். வாழ்த்துக்கள் சுந்தர கவிஞரே