கொஞ்சம் என்னையும் பாரு விட்டலா
குஞ்சலம் தலையில் தரித்து நின்றவா (கொ)
சஞ்சலம் கொண்டேன் என் மனதினில்
பஞ்சு போல் பறக்கும் உன் எதிரினில் (கொ)
மீரா பாய் பாடலில் மெத்த மகிழ்ந்தவனே
தீராத காதலை தீர்த்தரிடம் கொண்டவனே
சூடிய சுடர்கொடி மாலை அணிந்தவனே
பாடிய என்னையும் பார்த்தருள்வாயே (கொ)
பற்று கொண்டேன் உன்மேல்
தொற்றிக் கொண்டேன் தோள் மேல்!
ஒற்றைக் கல்லில் நின்று,
குற்றமெல்லாம் மறந்து, (கொ)
