விட்டலன் கதை இருக்க வேறு பேச்சு எதற்கு?
கட்டுக் கதையெல்லாம் கூட வருமோ நோக்கு
அபயம் தருவான் நல்லிதயம் தருவான்
கபசுர குடி நீர் போல் (நோயில்) காத்தருள்வான்
அட்டகாசமானது அவன் சரித்திரம்
விட்டலன் என்றால் போகும் பயித்தியம்
முட்ட முட்ட தின்றது போதும் போதும்
இட்டமுடன் சொல்வோம் வாரும் வாரும்
நாவல் கதைகள் கட்டுரைகள் எதற்கு?
நாவால் சொல்வோம் நலமே அதற்கு
பாவால் இசைப்போம் பக்குவம் கூடும்
தாவாது மனமும் நிலைக்கும் பாரும்!
